தேசிய செய்திகள்

ஜூனியர் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கெஜ்ரிவால் வாழ்த்து + "||" + Kejriwal congratulates Team India for win in Under 19 cricket world cup

ஜூனியர் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கெஜ்ரிவால் வாழ்த்து

ஜூனியர் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கெஜ்ரிவால் வாழ்த்து
ஜூனியர் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். # ArvindKejriwal
புதுடெல்லி,

நியூசிலாந்தில் நடைபெற்ற 12–வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில்  (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் , இளம் இந்திய வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவு செய்துள்ள வாழ்த்துச்செய்தியில், “ உலக கோப்பையை வென்ற 19 வயதுகுட்பட்டோருக்கான அணிக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.  டெல்லியை சேர்ந்த மன்ஜோத் கல்ரா நாம் அனைவரையும் பெருமை அடையச்செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.