உலக செய்திகள்

இத்தாலியில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு + "||" + Gunman opens fire on foreigners in Italian town

இத்தாலியில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு

இத்தாலியில் வெளிநாட்டவர்களை குறிவைத்து  மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு
இத்தாலியில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
மாக்ரெட்டா,

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நகரம் மாக்ரெட்டா, சுற்றுலாத்தலமான இந்த  நகரத்தில் வெளிநாட்டு பயணிகள் வந்த வாகனத்தை குறி வைத்து துப்பாக்கியுடன் காரில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தார். 

இந்த திடீர் தாக்குதலில்  6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.  துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான நோக்கம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.