தேசிய செய்திகள்

மத்திய அரசு தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே போபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு செய்கிறது: காங்கிரஸ் + "||" + CBI appeal in SC in Bofors case attempt by govt to divert attention from its failure : Cong

மத்திய அரசு தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே போபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு செய்கிறது: காங்கிரஸ்

மத்திய அரசு தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே போபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு செய்கிறது: காங்கிரஸ்
அரசு தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே போபர்ஸ் வழக்கில் மேல்முறையீடு செய்கிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #CBI #Boforscase
புதுடெல்லி,

சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ராணுவத்துக்கு ரூ.1437 கோடிக்கு போபர்ஸ் பீரங்கி வாங்குவதற்கு 1986–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் பெறுவதற்காக இந்திய அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 2005–ம் ஆண்டு மே மாதம் இதை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.சோதி சி.பி.ஐ.யின் வழக்கை ரத்து செய்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.

இந்த நிலையில், போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, 2014–ம் ஆண்டு ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்விகண்ட அஜய் அகர்வால் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கவேண்டும்.

ஆனால் சி.பி.ஐ. அதைச் செய்யத் தவறி விட்டது என்று குறிப்பட்டு இருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்த சிபிஐ, போபர்ஸ் ஊழல் வழக்கை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தது. 

சிபிஐ-யின் இந்த முடிவு குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ், தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மத்திய அரசு இது போன்ற தரம் தாழ்ந்த அரசியலை கையில் எடுத்து இருப்பதாக விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:- “ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்த பிறகு 28 ஆண்டுகள் கழித்து, குறிப்பாக அனைத்து நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளித்த பின்னர், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பது, நரேந்திர மோடி அரசு பின்பற்றும் தரம் தாழ்ந்த அரசியலுக்கான சான்றாகும். மோடி அரசின் மோசமான நிர்வாகத்தால் மக்கள் கொண்டு உள்ள கோபத்தை திசை திருப்பும் முயற்சியை தவிர இது வேறு எதுவும் இல்லை” என்றார்.