தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு வேறு பெயர் மாற்றம்: புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு + "||" + delhi tamilnadu house name changes again govt announced

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு வேறு பெயர் மாற்றம்: புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு வேறு பெயர் மாற்றம்: புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு வைகை, பொதிகை என பெயர் மாற்றம் செய்ததில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு இல்லம் அமைப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் அங்கு தமிழ்நாடு இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு புதிய பெயர் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. அதில், பழைய இல்லத்துக்கு வைகை தமிழ் இல்லம்; என்றும் புதிய இல்லத்துக்கு பொதிகை தமிழ் இல்லம் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள்  கடும்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களுக்கு மீண்டும் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இனி, வைகை - தமிழ்நாடு இல்லம், பொதிகை - தமிழ்நாடு இல்லம் என அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல நிர்வாகம் கோரிக்கை வைத்ததால் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.