தேசிய செய்திகள்

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம் + "||" + Centre to link driving licence with Aadhaar: Supreme Court told

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்

போலிகளை ஒழிக்க ஓட்டுனர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க திட்டம்
போலி ஒழிக்கும் முயற்சியாக ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Aadhaar
புதுடெல்லி, 

சாலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கமிட்டியானது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை செயலாளருடன் கடந்த நவம்பர் மாதம் 28–ந்தேதி விவாதித்தது.

அப்போது போலி ஓட்டுனர் உரிமங்களை ஒழிப்பதற்காக ‘சாரதி–4’ என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக இணை செயலாளர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து ஓட்டுனர் உரிமங்களுடனும் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ‘மென்பொருள்’ (சாப்ட்வேர்) ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையால் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், யாராலும் போலி ஓட்டுனர் உரிமம் தயாரிக்க முடியாது என்றும் விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.இந்த தகவல்களை நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.