தேசிய செய்திகள்

நீதிபதி லோயா மரண வழக்கு: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் இன்று அனுப்ப முடிவு + "||" + Opposition to take Judge Loya case to President Kovind

நீதிபதி லோயா மரண வழக்கு: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் இன்று அனுப்ப முடிவு

நீதிபதி லோயா மரண வழக்கு: ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் இன்று அனுப்ப முடிவு
நீதிபதி லோயா மரண வழக்கு தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் இன்று கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளன. #JudgeLoya
புதுடெல்லி, 


பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி லோயா 2014–ம் ஆண்டு திடீரென இறந்தார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி இருக்கின்றனர். இந்த கடிதத்தில் 100–க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

இதனை இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். #JudgeLoya