மாநில செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை + "||" + srilankan navy arrest 7 indian fisherman

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
ராமேசுவரம்,

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் நேற்றும் நடந்திருப்பது மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டபோது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் இது எங்கள் எல்லை. இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டபோது சில படகுக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை தாக்கியதோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.மேலும் படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த நாகராஜ், ஆறுமுகம், ரவி, மற்றொரு நாகராஜ், எமரிட், கார்த்திக், வரகுண பாண்டியன், ஆகிய 7 மீனவர்களையும் சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை தலைமன்னார் துறைமுகம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.   #Tamilnews