தேசிய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: சோனியா காந்தி + "||" + Rahul Gandhi Now My Boss Too, Let There Be No Doubt About That: Sonia Gandhi

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் தேர்தலுக்கு தயாராக வேண்டும்: சோனியா காந்தி

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால்  தேர்தலுக்கு தயாராக வேண்டும்: சோனியா காந்தி
நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். #SoniaGandhi
புதுடெல்லி,

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-  நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ராகுல் காந்தி எனக்கும் தலைவரே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் முன்பு இருந்த அதே அர்ப்பணிப்புடன் ராகுல் காந்தியுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும்.

காங்கிரஸின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலை எதிர்பார்க்கிறேன்.  ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பாராளுமன்றம், நீதித்துறை, மீடியா&சிவில் சொசைட்டி உட்பட அனைத்து அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. விசாரணை அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.