தேசிய செய்திகள்

ஜம்மு: பாகிஸ்தான் பயங்கரவாதி தப்பிக்க உதவி செய்த ஐந்து பேரை கைது செய்தது போலீஸ் + "||" + Five arrested for facilitating escape of Hanzalla

ஜம்மு: பாகிஸ்தான் பயங்கரவாதி தப்பிக்க உதவி செய்த ஐந்து பேரை கைது செய்தது போலீஸ்

ஜம்மு: பாகிஸ்தான் பயங்கரவாதி தப்பிக்க உதவி செய்த ஐந்து பேரை கைது செய்தது போலீஸ்
பாகிஸ்தான் பயங்கரவாதி நவீத் ஜூட் தப்பிக்க உதவி செய்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்,

2014-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் குல்காம் நகரில் பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நவீத் ஜூட் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீநகர் காகா சராய் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் நேற்று முன் தினம் காலை அழைத்துச் சென்றனர்.

அவர்கள் மருத்துவமனை வளாகத்தை நெருங்கியபோது, அங்கு வந்த 6 பயங்கரவாதிகள் நவீத் ஜூட்டுக்கு பாதுகாப்பாக இருந்த 2 போலீசாரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். உடனடியாக அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இருவரும் தலைமைக் காவலர்கள் முஸ்டாக் அகமது, பாபர் அகமது என்பது தெரிய வந்துள்ளது.இதற்கிடையே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலீசார் அழைத்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீட்டனர். பின்னர் போலீசார் வைத்திருந்த ஒரு நவீன ரக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விடிய விடிய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில், பயங்கரவாதி நவீத் ஜூட் தப்புவதற்கு உதவி செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.