மாநில செய்திகள்

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த் + "||" + First need to fix the system in Tamil Nadu: Rajinikanth

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ரஜினிகாந்த்
முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி  தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்த ரஜினிகாந்த், பாராளுமன்ற தேர்தல் குறித்து அந்த நேரத்தில்  முடிவு செய்வேன் எனவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், தனது கட்சி துவங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும்  ரஜினிகாந்த் கூறும் போது, “ நடிகர் கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.