தேசிய செய்திகள்

பரீட்சையில் காப்பி அடிக்க முடியாததால் 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை + "||" + UP board exams: 5 lakh students drop out by day 2 as Yogi govt cracks down on cheating

பரீட்சையில் காப்பி அடிக்க முடியாததால் 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

பரீட்சையில் காப்பி அடிக்க முடியாததால் 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
உத்தரபிரதேசத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில் கடுமையான கண்காணிப்பு நிலவுவதால் 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
லக்னோ

உத்தர பிரதேசத்தில்  10 மற்றும் 12 ம் வகுப்பு  தேர்வுகள் நடந்து வருகிறது .  செவ்வாய்க்கிழமை தொடங்கி  அடுத்த மாதம் மார்ச் 12 ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.  முதல் நாள் 1.8 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இரண்டாவது நாளான நேற்று 5 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை.

பரீட்சையில் காப்பி அடிப்பதை  தவிர்ப்பதற்காக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் மாணவர்கள் பரீட்சைக்கு எழுத வரவில்லை.

ஹார்டோ மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் இருந்து விலகி உள்ளனர். ஹார்டோவில் மட்டும் 31,000 மாணவர்கள் தேர்வு எழுதாமல் விலகி உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் பல பரீட்சைகளில் நியாயமற்ற நடைமுறையில்  மோசடி செய்யப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கடுமயான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தேர்வு மையங்களில் சி.சி.டி.வி.க்கள் நிறுவப்பட்டுள்ளன மற்றும் அதிகாரிகள் உள்ளூர் புலனாய்வு மற்றும் சிறப்பு பணிக்குழுவின் உதவியுடன் மோசடியை  கட்டுப்படுத்த முடிவு செய்தனர்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுத 66 லட்சம் மாணவ மாணவிகள் பதிவு செய்து உள்ளனர்.