தேசிய செய்திகள்

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு பற்றிய சிபிஐயின் ரகசிய ஆவணம் ப.சிதம்பரம் வீட்டில் பறிமுதல் - ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் + "||" + Aircel Maxis scam: Confidential report found in Chidambaram's house

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு பற்றிய சிபிஐயின் ரகசிய ஆவணம் ப.சிதம்பரம் வீட்டில் பறிமுதல் - ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல்

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு பற்றிய சிபிஐயின் ரகசிய ஆவணம் ப.சிதம்பரம் வீட்டில் பறிமுதல் - ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல்
ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ.யின் ரகசிய ஆவணம் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. #Chidambaram
புதுடெல்லி

பல கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஏர்செல் மேக்ஸிஸ் ஊழல் வழக்கில் விசாரணைகள் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 13 ம் தேதி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த விசாரணையில் எவ்வித ஆவணங்களும் எடுத்து செல்லப்படவில்லை என சிதம்பரம் கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., வரைவு அறிக்கையின் நகல் சிதம்பரம் டெல்லி வீட்டில் இருந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 2013ல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதாகும். 

இது சீலிடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படும். இவ்வாறான ரகசிய ஆய்வறிக்கை சிதம்பரம் வீட்டுக்கு எப்படி சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இத்தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.