உலக செய்திகள்

வங்காள தேச எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை + "||" + A Dhaka court has sentenced opposition leader Khaleda Zia to five years in jail

வங்காள தேச எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை

வங்காள தேச  எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியாவுக்கு  ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை
வங்காள தேச எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டு உள்ளது. #KhaledaZia
டாக்கா

வங்காளதேச  தேசியவாதக் கட்சித்  தலைவர் கலிதா ஜியா. 2 முறை பிரதமராக  இருந்து உள்ளார். ஒரு அனாதை இல்லம் உருவாக்கப்பட்டு  அதன்  அறக்கட்டளையிலிருந்து $ 252,000  ஊழல் செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இது அரசையல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை என கலிதா ஜியா மறுத்து வந்தார்.

இந்த வழக்கில்  நீதிபதி   வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது;-

நீதிமன்றத்தில் கலிதாவுக்கு  எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கபட்டு உள்ளது மற்றும் அவருடைய சமூக மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு,  409 மற்றும் 109 பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

தீர்ப்பை அடுத்து  பாதுகாப்பு படைகளுக்கும், கலிதா ஜியா ஆதரவாளர்களுக்கும் இடையில் வன்முறை மோதல்கள் வெடித்தன.
போராட்டத்தில் ஈடுபட்ட  ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். இந்த வன்முறையில் 5 போலீசார் காயம் அடைந்து உள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டன. 

ஜியா வன்முறை மற்றும் ஊழல் தொடர்பான தனித்தனியாக பல்வேறு வழக்குகளை  எதிர்கொண்டு வருகிறார். லண்டனில் உள்ள அவரது மகன், 2016 ல் பணமோசடிக்கு தண்டனை விதிக்கப்பட்டார்.