உலக செய்திகள்

அமெரிக்கா தலைமையிலான படையினரின் தாக்குதலில் 100 சிரிய அரசு ஆதரவு படையினர் பலி + "||" + US-led strikes on Syria pro-regime forces kill 100: official

அமெரிக்கா தலைமையிலான படையினரின் தாக்குதலில் 100 சிரிய அரசு ஆதரவு படையினர் பலி

அமெரிக்கா தலைமையிலான படையினரின் தாக்குதலில் 100 சிரிய அரசு ஆதரவு படையினர் பலி
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படை நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

வாஷிங்டன்,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.  அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு ராணுவத்தினரை பயன்படுத்தியது.  இதனை தொடர்ந்து நடந்த தாக்குதலில் 3 லட்சத்திற்கும் கூடுதலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரும் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒடுக்க சிரிய அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த படையினர் சிரிய அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக தற்காப்பிற்காக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இத்தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.