தேசிய செய்திகள்

இந்தூரில் பத்மாவத் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு + "||" + Padmaavat: Indore release deferred despite theatre owners, distributors agreeing to screen film

இந்தூரில் பத்மாவத் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

இந்தூரில் பத்மாவத் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
சர்ச்சைக்குரிய திரைப்படமாகிய பத்மாவத் இன்று இந்தூரில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்தூர்,

சர்ச்சைக்குரிய திரைப்படமாகிய பத்மாவத் இன்று இந்தூரில் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

மத்திய பிரதேச அரசு போதுமான பாதுகாப்பு தருவதாக கூறியதன் அடிப்படையில், பட வினியோஸ்தகர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் 2 நாள்களுக்கு முன்னர் படத்தை வெளியிடுவதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று மறுபடியும் படம் திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பத்மாவத் எந்த தேதியில் ரீலிஸ் ஆகும் என தங்களால் கூற இயலாது என மத்தியத் திரைப்படக்கூட்டமைப்பு இயக்குனர் ஒ.பி.கோயல் கூறீயுள்ளார். நேற்றிரவு கர்னி சேனா அமைப்பின் தலைவர்களுக்கு சிறப்புக்காட்சி காண்பிக்கப்பட்ட நிலையில் அவர்கள், படத்தில் வரலாற்று நிகழ்வுகள் திரித்துக்கூறப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

மேலும் கர்னி சேனா அமைப்பின் மாநில தலைவர் ரகு பர்மார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஆரம்பத்திலிருந்தே சித்தூரை ஆண்ட ரத்தன் சிங்கின் கதாபாத்திரம் பலவீனமாக காட்டப்பட்டுள்ளது.படத்தில் பத்மாவதி ராணி டெல்லிக்கு சென்று சிறையில் அடைப்பட்டிருக்கும் தன் கணவனை விடுவிப்பதாகவும் காட்சி அமைத்துள்ளனர்.இவ்வாறு வரலாற்றிக்கு புறம்பாக திரைப்படம் எடுக்கும் பன்சாலி படம் எடுப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார்.