தேசிய செய்திகள்

போலி அடையாள அட்டையுடன் மம்தா பானர்ஜி வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது + "||" + Man held for trying to enter CM's residence with fake ID

போலி அடையாள அட்டையுடன் மம்தா பானர்ஜி வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது

போலி அடையாள அட்டையுடன் மம்தா பானர்ஜி வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது
மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டிற்குள் போலி அடையாள அட்டையுடன் டாக்டர் என கூறி நுழைய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டிற்குள், மாநிலத்தில் சுகாதார வசதியை விரிவுபடுத்துவதற்காக முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என கூறி கொண்டு 30 வயது மதிக்கத்தக்க  ஒருவர் நுழைய முயன்று உள்ளார்.    மகாராஷ்டிராவின் புனே நகரில் ஆரோக்கியபராமரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைபார்ப்பதாக  கூறி  அவர்  போலி அடையாள அட்டையை அங்கிருந்த போலீசாரிடம் காட்டியுள்ளார்.

ஆனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.  மேலும் அந்த நபரிடம் இருந்து  பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக  போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வரை ஏன் சந்திக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவரின் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என் அதிகாரிகள் கூறி உள்ளனர்.