தேசிய செய்திகள்

ஜம்முவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படை திடீர் தாக்குதல்; பெண் பலி + "||" + Woman killed in Pak shelling along LoC in Poonch

ஜம்முவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படை திடீர் தாக்குதல்; பெண் பலி

ஜம்முவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படை திடீர் தாக்குதல்; பெண் பலி
ஜம்முவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 45 வயது பெண் உயிரிழந்துள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சிறிய ஆயுதங்கள், தானியங்கிகள் மற்றும் சிறு பீரங்கிகள் கொண்டு முன்னறிவிப்பு இன்றி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் வலிமையுடன் மற்றும் திறமையாக தாக்குதல் நடத்தியது.  இந்நிலையில் பாகிஸ்தானின் தாக்குதலில் வெடிகுண்டுகள் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.  அவர் ஜைனப் பீ என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இதனால் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த வருடத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.  இதில் 9 பேர் பொதுமக்கள்.  75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.