உலக செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரிய அரசு + "||" + Syria calls U.S.-led coalition strike in east Syria "war crime"

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்: சிரிய அரசு

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம்:  சிரிய அரசு
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய தாக்குதல் போர் குற்றம் என அந்நாடு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

பெய்ரூட்,

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒடுக்க சிரிய அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த படையினர் சிரிய அதிபரின் ஆதரவு படையினருக்கு எதிராக தற்காப்பிற்காக நடத்திய தாக்குதலில் 100 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியானது.

இந்த படுகொலையை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் அமெரிக்க கூட்டணி படையினர் நடத்திய தாக்குதல் ஒரு போர் குற்றம் என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஐ.நா. சபைக்கு சிரிய வெளியுறவு அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.  அதில், அமெரிக்க கூட்டணி படையை சட்டவிரோதம் என்றும் அதனை கலைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.