மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Dr. Ramadoss's assertion

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்த வேண்டும். 7 தமிழர்களில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் உண்மைத் தன்மையையும், சாத்தியக்கூறுகளும் உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம்.

மத்தியப் புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா? என்பது குறித்த சர்ச்சைகளும், நடைமுறைகளும் இவர்களின் விடுதலைக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக்கூடாது.

அதற்கேற்ற வகையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.