தேசிய செய்திகள்

மாலத்தீவு விவகாரம் தொடர்பாக டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு + "||" + Trump, Modi discuss situation in Maldives over phone call

மாலத்தீவு விவகாரம் தொடர்பாக டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

மாலத்தீவு விவகாரம் தொடர்பாக டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். மாலத்தீவு விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  மாலத்தீவில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உயர்த்துவது உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக்கொண்டது நடப்பு ஆண்டு இதுதான் முதல் தடவையாகும். மோடி-டிரம்ப் தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- “மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் கவலை வெளிப்படுத்தினர். மாலத்தீவில் ஜனநாயக அமைப்புகளுக்கு மதிப்பு அளிக்கப்படுவதன் முக்கியத்தும் பற்றியும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் விவகாரம் குறித்தும் ரோகிங்கியா அகதிகளின் நிலைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்துக்கொண்டனர் எனவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.