தேசிய செய்திகள்

பிடிபி-பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் - ராகுல் காந்தி + "||" + Soldiers paying with blood because of opportunistic alliance in JK Rahul Gandhi

பிடிபி-பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் - ராகுல் காந்தி

பிடிபி-பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் - ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீரில் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாகவே வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். #Tamilnews

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்தே அமைதியின்மை அவ்வபோது எழுந்து வருவது தொடர்கதையாகி உள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசிடம் எந்தஒரு கொள்கையும் கிடையாது, ஜம்மு காஷ்மீரில் உருவான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாகவே வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் என விமர்சனம் செய்து உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து உள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி கூறுகிறது. பாரதீய ஜனதாவை சேர்ந்த பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், பாகிஸ்தான் விலைக்கொடுக்கும் என்று கூறுகிறார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா இடையிலான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக நம்முடைய ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள். காஷ்மீர் விவகாரத்தில் எந்தஒரு கொள்கையும் கிடையாது; மோடிஜி குழப்பத்தில் உள்ளார்,” என கூறிஉள்ளார்.