தேசிய செய்திகள்

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு + "||" + Cochin Shipyard fire: Blast onboard ONGC vessel kills five, inquiry commission to probe accident

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #KochiBlast
கொச்சி, 

கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தில் ஓ.என்.ஜி.சி. என்று அழைக்கப்படுகிற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு சொந்தமான சாகர் பூ‌ஷண் என்ற கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் காலை சுமார் 10 மணிக்கு சுமார் 20 ஒப்பந்த தொழிலாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கப்பலின் முன் பகுதியில் அமைந்து இருந்த டேங்கரில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது. 
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இருப்பினும் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பலி ஆனவர்களுக்கு மத்திய கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரியும், கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலைக்கு சென்ற 2 பெண்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள் !
சபரிமலைக்கு சென்ற 2 பெண்களை வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர்.
2. பெட்ரோல் ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் - நிதின் கட்காரி
பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
3. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நிதின் கட்காரி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari
4. கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி
கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி கலந்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
5. கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது முதல்கட்ட உதவிதான், மேலும் உதவிகள் வழங்கப்படும்: மத்திய அரசு
கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது முதல்கட்ட உதவிதான், மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.