உலக செய்திகள்

இந்தியா தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம் பாகிஸ்தான் மிரட்டல் + "||" + Pakistan Warns of Equal Response to Indian Misadventure After Sitharaman s Ultimatum

இந்தியா தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம் பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியா தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம் பாகிஸ்தான் மிரட்டல்
இந்தியா தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்து உள்ளது.

இஸ்லாமாபாத்,


காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.  
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இமுகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இந்திய வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது, பாகிஸ்தான் தன்னுடைய தவறுக்கு விலைகொடுக்கும் என்றார். இந்நிலையில் பாகிஸ்தானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்து உள்ளது.  
 
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி குர்ரம் விடுத்து உள்ள அறிக்கையில் இந்தியா எந்தவொரு தவறான தாக்குதல் தொடுத்தாலும், பாகிஸ்தான் உரிய பதிலடியைத் தரும். நாட்டை காப்பதற்கு பாகிஸ்தான் படைகள் முழுமையான தயார் நிலையில் உள்ளன. இந்தியா வலுச்சண்டைக்கு வந்தால், தவறாக கணித்தால், தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பிக்கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் மண்ணை நாங்கள் காப்பாற்றுவோம். எந்தஒரு ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளும் சதிதிட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.