தேசிய செய்திகள்

ரூ. 15,935 கோடியில் பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் + "||" + Defence Ministry s nod for procuring 7.40 lakh assault rifles

ரூ. 15,935 கோடியில் பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ரூ. 15,935 கோடியில் பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ரூ. 15,935 கோடி அளவில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. #Tamilnews

புதுடெல்லி,

 

இயந்திர மற்றும் ஸ்னீப்பர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதலை வழங்கி உள்ளது. முப்படைகளுக்கும் ரூ.12.280 கோடி அளவில் 7.40 லட்சம் துப்பாக்கிகளை வாங்க முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 1,819 கோடி செலவில் இயந்திர துப்பாக்கிகளை வாங்கவும் சம்மதம் தெரிவித்து உள்ளது. 7.40 லட்சம் துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் வெளிநாட்டு தரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ராணுவத்திற்கு ரூ. 982 கோடியில் 5,719 ஸ்னீப்பர் துப்பாக்கிகளை வாங்கும் திட்டத்திற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது. ஸ்னீப்பர் துப்பாக்கிகள் நேரடியாக வெளிநாட்டில் இருந்து வாங்கப்படுகிறது. 

தோட்டாக்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும், பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.