கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்க அணிக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா + "||" + Rohit 115 helps India to 274

தென் ஆப்பிரிக்க அணிக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா

தென் ஆப்பிரிக்க அணிக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணையித்துள்ளது. #INDvsSA
போர்ட் ஆப் ஸ்பெயின்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடந்த 3-வது ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் இந்திய வீரர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறப்பான பார்மில் இருந்த ஷிகர் தவான் இன்றைய போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறிவிட்டார். 34 ரன்களில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து, ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி கை கோர்த்தார். கடந்த சில ஆட்டங்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடும் விமர்சனத்துக்குள்ளான ரோகித் சர்மா, தன் மீதான விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய போட்டியில் விளையாடினார். இதற்கிடையில், ரன்மெஷின் என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி 36 ரன்களில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரகானேவும் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். இருப்பினும், மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். 126 பந்துகளில் 4 சிக்சர் 11 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் அடித்த ரோகித் சர்மா நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். 

கடைசி நேரத்தில் இந்திய அணி சற்று தடுமாறியதால் எதிர்பார்க்கப்பட்ட ரன்களை விட குறைந்து போனது. ஷ்ரேயாஸ் ஐயர் (30 ரன்கள்) ஹர்திக் பாண்ட்யா (0), தோனி (13 ரன்கள்) புவனேஷ்குமார் (19 ரன்கள் ஆட்டமிழக்காமல்) குல்தீப் யாதவ் (2 ரன்கள் ஆட்டமிழக்காமல்) எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து உள்ளது. இதன் மூலம் 275 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணையிக்கப்பட்டது.  பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 4 விக்கெட்டுகளையும் ரபடா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை: இலங்கை அரசு விளக்கம்
இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
2. துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு அடிப்படை வசதி - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி
புதுவை கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதி அளித்துள்ளார்.
3. ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
ஏரியூர் அருகே கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
4. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது.
5. நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்
நட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.