தேசிய செய்திகள்

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் காந்தி அதிர்ச்சி + "||" + Rahul expresses shock at killing of Youth Congress leader

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் காந்தி அதிர்ச்சி

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம்: ராகுல் காந்தி அதிர்ச்சி
கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். #RahulGandhi
புதுடெல்லி,

கேரள அரசியலில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் ஆதிக்கம் அதிகமுள்ளது.  இந்த இரு கட்சிகளின் கூட்டணிகளே ஆட்சியில் இருந்து வருகின்றன.  பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கேரளாவில் வளர்ச்சியடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருட சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி முதன்முறையாக ஒரு தொகுதியை கைப்பற்றியது.

எனினும், ஆளும் இடதுசாரி அமைப்பினருக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுஹைப் (வயது 30) நேற்று நள்ளிரவு கும்பல் ஒன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நிலைகுலைந்த அவர் மீது அந்த கும்பல் ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளது.  இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுஹைப் கண்ணூர் நகரில் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார்.  பின் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.  இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என முதற்கட்டமாக தகவல்கள் வெளியான நிலையில், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

இந்த நிலையில், கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். தனது அலுவலக டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட செய்தி அறிந்து நான் அதிர்ச்சியுற்றேன். இந்த கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலை சுஹைப் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
எச்ஏஎல் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
2. கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை காங்.தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
3. நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி
நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்வது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. “என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்
“என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” என ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
5. தனித்து போட்டியிடும் மாயாவதியின் முடிவால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது: ராகுல் காந்தி
தனித்து போட்டியிடும் மாயாவதியின் முடிவால் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.