தேசிய செய்திகள்

சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் எங்கள் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன்மோகன் ரெட்டி + "||" + YSRC MPs to resign if AP special category demand not met

சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் எங்கள் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன்மோகன் ரெட்டி

சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் எங்கள் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் - ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் எங்கள் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என ஜெகன்மோகன் ரெட்டி கூறிஉள்ளார். #Tamilnews

நகரி, 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சிறப்பு நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்காத விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. மாநிலங்களவையில்  அருண் ஜெட்லி பேசுகையில், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக இருநாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றார். இருப்பினும் ஆந்திர பிரதேச மாநில எம்.பி.க்களின் போராட்டம் தொடர்ந்தது. ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளது.

குஜராத் தேர்தல் முடிவை அடுத்து பாரதீய ஜனதாவினர் பேச்சு காரணமாக இரு கட்சிகள் இடையே பிளவு ஏற்பட தொடங்கியது. மத்திய அரசின் செயல்பாடு இருகட்சிகள் இடையே பிளவை விரிவடைய செய்து உள்ளது. கூட்டணி தொடர்பான கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து உள்ளார். “ஆந்திராவிற்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். பின்னர் பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்றது.  சந்திரபாபுநாயுடு 15 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்தை போராடி பெறுவேன் என்றார். ஆனால் மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டிலும் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஆந்திர மாநிலத்திற்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறார்கள். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் எங்கள் கட்சி எம்.பி.க்கள் போராடுவார்கள். அதன்பின்னரும் சிறப்பு அந்தஸ்து அளிக்காவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊர் திரும்புவார்கள் என கூறிஉள்ளார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 9 எம்.பி.க்கள் தேர்வு ஆனார்கள். மாநிலங்களவையில் ஒரு எம்.பி. உள்ளது. அக்கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்துவிட்டனர். மற்றொரு எம்.பி. நடுநிலையாக உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜெகன்மோகன் ரெட்டியை கத்தியால் குத்திய வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சீனிவாஸ் (வயது 20) என்பவர் கத்தியால் 25–ந் தேதி குத்தினார்.