உலக செய்திகள்

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை + "||" + Pak backed militants to continue attacks inside India: US

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Tamilnews
வாஷிங்டன்,

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுப்பார்கள் எனவும், இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும்  பதட்டம்  அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை  தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 6 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற மறு தினமே அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் வெளியிட்டுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உளவுத்தகவல்களுக்கான செனட் கமிட்டி முன்பு தனது அறிக்கையை சமர்பித்த டான்கோட்ஸ் இந்த தகவலை  தெரிவித்துள்ளார். அணு ஆயுத வல்லமை கொண்ட ஆயுதங்கள் , பயங்கரவாதிகளுடன் நட்பு பாராட்டுவது, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழப்பு நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகள் செய்வது, சீனாவுடன் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் அமெரிக்காவின் நலனுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பாகிஸ்தான் தனது செயலை தொடர்கிறது என்று கோட்ஸ் தெரிவித்துள்ளார்.  

மேலும், பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் பயங்கரவாதிகள்,  இந்தியா, ஆப்கானிஸ்தான் மட்டும் அல்லாது அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோட்ஸ் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மெகுல் சோக்சி
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்திய பாஸ்போர்ட்டை மெகுல் சோக்சி ஒப்படைத்துள்ளார்.
2. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி
காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
3. துளிகள்
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரில், முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது.
4. பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
5. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் எல்லையில் குவிப்பு
இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.