தேசிய செய்திகள்

பசியில் முள்ளங்கியை சாப்பிட்ட சிறார்களை ஆடைகளை களைய செய்து தாக்குதல், போலீஸ் வழக்குப்பதிவு + "||" + Hungry Dalit Kids Beaten Up, Disrobed in Amritsar Village for Stealing Radishes

பசியில் முள்ளங்கியை சாப்பிட்ட சிறார்களை ஆடைகளை களைய செய்து தாக்குதல், போலீஸ் வழக்குப்பதிவு

பசியில் முள்ளங்கியை சாப்பிட்ட சிறார்களை ஆடைகளை களைய செய்து தாக்குதல், போலீஸ் வழக்குப்பதிவு
பசியில் முள்ளங்கியை திருடியதாக சிறார்களை ஆடைகளை களைய செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

அமிர்தசரஸ்,

அமிர்தசரஸில் உள்ள சோகினா காலா கிராமத்தில் விவசாய நிலத்தில் பசியில் முள்ளங்கியை திருடிய 5 தலித் சிறார்களின் (8 முதல் 10  வயதுடையவர்கள்) ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக பேரணியாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரம் நடந்து உள்ளது.  

சிறார்கள் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து விவசாயிக்கு எதிராக பஞ்சாப் மாநில போலீஸ்  வழக்குப்பதிவு செய்து உள்ளது.

வீடியோவில் பேசும் ஒரு சிறுவன் கூறுகையில், “நாங்கள் பட்டத்திற்கு பின்னால் ஓடி சென்றோம், அப்போது நாங்கள் விவசாய நிலத்திற்குள் சென்றுவிட்டோம். பசியாக உணர்ந்தோம். அங்கு முள்ளங்கியை பார்த்தோம், அதனை எடுத்து சாப்பிட்டோம். எங்களை பார்த்த விவசாயி  அடித்துவிட்டார்,” என கூறிஉள்ளார். முள்ளங்கியை சாப்பிட்ட சிறார்கள் விவசாயிடம் சிக்கி உள்ளனர். அவர்களை விவசாயி தாக்கி உள்ளார்.  அவர்களின் ஆடையை களைய செய்து, நிர்வாணமாக மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு துரத்தி உள்ளார் என தெரியவந்து உள்ளது.

இதுதொடர்பான வீடியோ வெளியாகியதும் குற்றவாளி தலைமறைவு ஆகிவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சிறார்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என  தெரியவந்து உள்ளது. மழை மற்றும் குளிரில் சிறார்களை ஆடையை கழைய செய்து விவசாயி துரத்தி உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பயத்தில் ஓடிய சிறார்களுக்கு அவ்வழியாக சென்றவர் ஆடையை வழங்கி வீடியோ எடுத்து உள்ளார் என தெரியவந்து உள்ளது.

பின்னர் விவசாயியின் தந்தை சிறார்களின் ஆடையை திருப்பி கொண்டு வந்து கொடுத்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.