கிரிக்கெட்

11-வது ஐபிஎல் தொடர்: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை + "||" + CSK, Mumbai Indians to start IPL-11, match timings retained

11-வது ஐபிஎல் தொடர்: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை

11-வது ஐபிஎல் தொடர்: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை
11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL #CSK
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது.  ஐபிஎல் 11-வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் விளையாட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாட உள்ளன. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மே 27 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை