மாநில செய்திகள்

அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முன்பு போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு + "||" + All regulatory bidders have previously struggled Dr. Ramadoss's announcement

அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முன்பு போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முன்பு போராட்டம்
டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை ஒவ்வொரு நாளும் மறைமுக ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படும்.

விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சாக்குகளில் மாற்றி விற்பனைக்காக வைக்கவேண்டும். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தாலும், ஒவ்வொரு பணிக்கும் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. ஒரு நாளைக்கு 1,000 விவசாயிகள் வந்தால் அவர்களிடமிருந்து ரசீது போடுவதற்காக மட்டும் தலா ரூ.50 வீதம் ரூ.50,000 லஞ்சமாக பெறப்படுகிறது. இதுதவிர வேளாண் பொருட்களுக்கு விலை குறைத்து நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் தனியாகும்.

போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. விவசாயிகளின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இது தான் உதாரணமாகும். உடனடியாக இந்த ஊழல்களை, முறைகேடுகளை தடுக்கவும், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

மேலும் கண்காணிப்புக் குழுவை அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் இதை செய்யத் தவறினால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் கூட்டணி, பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
தேர்தல் கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
2. ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் தர்மபுரியில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி மலர இளைஞர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
4. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க அக்கறை இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.