மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை ஜூன் மாதத்துக்குள் அறிவிக்க, ஐகோர்ட்டு உத்தரவு + "||" + AIIMS To be announced by June, High Court Directive

எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை ஜூன் மாதத்துக்குள் அறிவிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை ஜூன் மாதத்துக்குள் அறிவிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை ஜூன் மாதத்துக்குள் அறிவிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும்

வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.

ஜூன் மாதம்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனையடுத்து வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை ஜூன் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.