மாநில செய்திகள்

மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் அமைச்சர் காமராஜ் பேட்டி + "||" + All smart cards will come to function, said Kamaraj

மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் அமைச்சர் காமராஜ் பேட்டி

மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் அமைச்சர் காமராஜ் பேட்டி
ரேஷன் கடைகளில் மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
சென்னை,

ரேஷன் கடைகளில் மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக கொண்டுவந்த உன்னதமான திட்டம் ஸ்மார்ட் கார்டு திட்டமாகும். ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ரூ.330 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை அவர் கொண்டுவந்தார்.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தொடங்கிவைத்தார். திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே நிறைவு செய்திருக்கிறோம். ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் உதாரணமாகும்.

இதுவரை, ஒரு கோடியே 93 லட்சத்து 58 ஆயிரத்து 47 ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன. இன்னும் ஒருசில ரேஷன் கார்டுகள் மாற்றப்பட வேண்டியிருப்பதால், உடனடியாக விடுபட்டவர்கள் முகவரி, புகைப்படம் ஆகியவற்றுடன் வந்தால் உடனே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு ‘ஆக்டிவேட்’ ஆக மார்ச் மாதம் வரை அவகாசம் கொடுத்திருக்கிறோம். மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து ஸ்மார்ட் கார்டுகளும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும். அதே நேரத்தில், புகைப்படம் இல்லாதது, ஆதார் எண், முகவரி கொடுக்க தாமதமானது என்று சொல்லி பயனாளிகள் வரும்போது, அந்த கார்டுகளுக்கு பொருள் இல்லை என்று சொல்ல முடியாது. நிச்சயமாக, அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.