மாநில செய்திகள்

ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் டாக்டர் ராமதாஸ் பேச்சு + "||" + Even Rajinikanth and Kamal can get a 10% drive by Dr. Ramadoss

ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் டாக்டர் ராமதாஸ் பேச்சு

ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
கும்மிடிப்பூண்டியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் என்று கூறினார்.
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் என்று கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். டிசம்பர் மாதமே எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். பா.ம.க.வை எதிர்க்கும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. டெபாசிட் வாங்கக்கூடாது என்பது என்னுடைய ஆசை. இது நடக்க கூடியதுதான். பேராசை அல்ல.

தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி பா.ம.க.வுக்கு மட்டும்தான் உண்டு. இதை நான் சொல்லவில்லை. கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

சாருஹாசனுக்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பார்த்ததும், பேசியதும் கிடையாது. உள்ளது உள்ளபடியே எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் சாருஹாசனுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். நடக்கப்போவதை அவர் சொல்லி இருக்கிறார்.

கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும். ஆனால் பா.ம.க. எதிர் வருகிற எந்த தேர்தல் ஆனாலும் 40 முதல் 50 சதவீத வாக்குகளை வாங்குவோம். அந்த அளவுக்கு மக்கள் மனம் மாறி உள்ளார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.