மாநில செய்திகள்

அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும் - சீமான் + "||" + Kamal and I work together in politics Time will decide-Seeman

அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும் - சீமான்

அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும் - சீமான்
அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும் என கமல்ஹாசனை சந்தித்த பிறகு சீமான் கூறினார். #KamalHaasan #Seeman
சென்னை

கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சீமான்  கமல்ஹாசனை சந்தித்து உள்ளார்.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன்; தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன்.கமலின் பயணம் புரட்சிகரமாக, வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்; கமல் என்னை வந்து சந்திப்பதை விட நானே நேரில் சந்திப்பதற்காக வந்தேன். 

அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

தமிழகம் மிக மோசமான சூழலில் உள்ள நிலையில், மாற்றத்தை கொண்டுவர நடிகர் கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும்.

கமல்ஹாசன் என்னை சந்திக்க விரும்பினார் அதனால் நான் அவரை சந்தித்தேன் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க விரும்பினால் அவரையும் சந்திப்பேன்.

மக்களுக்கு நன்மை செய்வதே இருவரின் நோக்கம்.

நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

சீமானுக்கு என்னை தெரியும், எனது சினிமாவை தெரியும்; ஆனால் எனது கொள்கை தெரியாது. எனது கொள்கை அவருக்கு முழுமையாக தெரியாத நிலையில் இப்போது ஆதரவு பற்றி கேட்பது சரியல்ல. 

அதிமுக தலைவர்கள் யாரையும் நான் சந்திக்கப் போவதில்லை.  இந்த ஆட்சி சரியில்லை எனக் கூறும் நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திக்க முடியும்  என கூறினார்.