சினிமா செய்திகள்

புதிய கட்சியின் பெயரையும், எனது கொள்கையின் சாராம்சத்தையும் நாளை தெரிவிப்பேன் - கமல்ஹாசன் + "||" + The name of the new party, I will inform the essence of my policy tomorrow - Kamal Hassan

புதிய கட்சியின் பெயரையும், எனது கொள்கையின் சாராம்சத்தையும் நாளை தெரிவிப்பேன் - கமல்ஹாசன்

புதிய கட்சியின் பெயரையும், எனது கொள்கையின் சாராம்சத்தையும் நாளை தெரிவிப்பேன் - கமல்ஹாசன்
புதிய கட்சியின் பெயரையும், எனது கொள்கையின் சாராம்சத்தையும் நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தெரிவிப்பேன் என கமல்ஹாசன் கூறினார். #KamalHaasanPoliticalEntry #Maiam
சென்னை

அரசியலில் வேகம் காட்டிவரும் கமல்ஹாசன், ஏற்கனவே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனைப் பெற்றார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்த கமல்ஹாசன் நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து பேசினார்.

நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். பின்னர்  யாரும் எதிர்பாராத வகையில்,  சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்று அவரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை  நடிகர் கமல்ஹாசன்  கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார்.

பின்னர் அரசியலில் தனிக்கட்சி தொடங்கிய பாக்யராஜ், தனிக்கட்சி நடத்தி வரும் டி.ராஜேந்தர் ஆகியோரிடம் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக பேசினார்.

இன்று  நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமான்  சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில்  அவரை சந்தித்து பேசினார். 

இந்த நிலையில்  நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க என அழைப்பு விடுத்து உள்ளார்.