மாநில செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா ; மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு + "||" + Karnataka has opened water in cauvery Mettur dam water supply will be increased

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா ; மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு

காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா ; மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு
கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திடீரென திறந்துவிட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. #Cauvery #TamilNews
சென்னை

காவிரியில் இருந்து ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்  சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், தற்போது காவிரி நதியில் தமிழகத்திற்கு வினாடிக்கு, 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கபினி அணையில் இருந்து கர்நாடகா தண்ணீர் திறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் அணையில், தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று 42.34 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 42.23 அடியாக குறைந்தது.  கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திடீரென்று ஒகேனக்கல்லுக்கு வந்து நீர்வரத்து அதிகரித்தது. இந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணைக்கு வந்தடையும். இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.