தேசிய செய்திகள்

லாக்கப்பை உடைத்து கற்பழிப்பு குற்றவாளிகளை இழுத்துச் சென்று கொலை செய்த மக்கள் + "||" + Mob overpower Arunachal prison, drag out 2 rape-murder accused, lynch them

லாக்கப்பை உடைத்து கற்பழிப்பு குற்றவாளிகளை இழுத்துச் சென்று கொலை செய்த மக்கள்

லாக்கப்பை உடைத்து கற்பழிப்பு குற்றவாளிகளை  இழுத்துச் சென்று கொலை செய்த மக்கள்
போலீஸ் நிலையத்தை தாக்கி லாக்கப்பை உடைத்து கற்பழிப்பு குற்றவாளிகளை இழுத்துச் சென்ற ஊர்மக்கள் கொலை செய்தனர். #TamilNews
கவுகாத்தி, 

அருணாசலப்பிரதேச மாநிலம் லோகித் மாவட்டம் தேசு என்ற இடத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த 12-ந்தேதி திடீர் என்று மாயமாகி விட்டார். நேற்று காலை சிறுமி நம்கோவின் உடல்  கிராமத்தில் காட்டுப் பகுதியில் கிடந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேயிலை தோட்ட ஊழியர்கள் சஞ்சய் கோபர் (30), ஜெகதிஷ் லேகர் (26) ஆகிய 2 பேரை  கைது செய்யபட்டனர். 

இருவரையும்  வாக்ரோ போலீஸ்  நிலையத்தில் லாக்கப்பில்  அடைத்து வைத்து விசாரணை நடத்திக் கொண்டு  இருந்தனர். கற்பழிப்பு குற்றவாளிகள் கைதான தகவல் அறிந்த கிராம மக்கள்  போலீஸ் நிலையம் முன் திரண்டனர்.

திடீரென்று  ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர்.  லாக்கப்பை உடைத்து 2 குற்றவாளிகளையும் அங்கிருந்து தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்கள்.

இதில் இருவரும்  இறந்தனர். பின்னர் இருவரது பிணங்களையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதற்குள் அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.