கிரிக்கெட்

டிவில்லியர்ஸுக்கு அடுத்து ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் 900 புள்ளிகளைக் கடந்த வீரர் வீராட் கோலி + "||" + Virat Kohli hits new record, crosses 900-point mark in Tests and ODIs rankings

டிவில்லியர்ஸுக்கு அடுத்து ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் 900 புள்ளிகளைக் கடந்த வீரர் வீராட் கோலி

டிவில்லியர்ஸுக்கு அடுத்து ஒருநாள், டெஸ்ட்  இரண்டிலும் 900 புள்ளிகளைக் கடந்த வீரர் வீராட் கோலி
டிவில்லியர்ஸுக்குப் பிறகு ஒருநாள், டெஸ்ட் என இரண்டிலும் 900 புள்ளிகளைக் கடந்த வீரர் என்கிற பெருமையையும் வீராட் கோலி பெற்றுள்ளார். #ViratKohli #ICCODI
துபாய்

ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் (844) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (823) 3-வது இடத்திலும் உள்ளார்கள். பாபர் அஸம், ஜோ ரூட் ஆகியோர் 4,5-ம் இடங்களில் உள்ளார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். 1993 மார்ச் 26-ல் பிரையன் லாரா 908 புள்ளிகள் எடுத்தார். 24 வருடங்களுக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் லாராவின் புள்ளிகளைக் கடந்த வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விவியன் ரிச்சர்ட்ஸ். 1985-ம் ஆண்டு 935 புள்ளிகள் எடுத்ததே அதிகபட்சமாகும். இந்தப் பட்டியலில் 909 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளார் கோலி. அடுத்த இடத்தில் லாரா உள்ளார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சச்சின் அதிகபட்சமாக 1998-ல் 887 புள்ளிகள் பெற்றார்.

மேலும் டிவில்லியர்ஸுக்குப் பிறகு ஒருநாள், டெஸ்ட் என இரண்டிலும் 900 புள்ளிகளைக் கடந்த வீரர் என்கிற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா வந்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரில் விராட் கோலி 558 ரன்கள் எடுத்தார் (112, 46*, 160*, 75, 36, 129*) என்பது குறிப்பிடதக்கது.