சினிமா செய்திகள்

நான் பூ அல்ல., விதை விதைத்து பாருங்கள் மு.க.ஸ்டாலினுக்கு கமல் பதிலடி + "||" + I'm not flower.Seed,Look for sowing Kamal replied to MK Stalin

நான் பூ அல்ல., விதை விதைத்து பாருங்கள் மு.க.ஸ்டாலினுக்கு கமல் பதிலடி

நான் பூ அல்ல., விதை  விதைத்து பாருங்கள் மு.க.ஸ்டாலினுக்கு கமல் பதிலடி
காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என்ற மு.க. ஸ்டாலின் கூறியதற்கு நான் பூ அல்ல., விதை விதைத்து பாருங்கள் என கமல்ஹாசன் பதில் அளித்து உள்ளார். #KamalHaasan #MKStalin
மதுரை

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் 

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும்,  பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!  என கூறி இருந்தார்.

இது குறித்து கமல்ஹாசன்  மதுரையில் ஸ்டாலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்; " நான் பூ அல்ல., விதை " என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன் என அதிரடியாக பதில் கூறியுள்ளார்.