தேசிய செய்திகள்

டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஐஏஎஸ் சங்கம் கண்டனம் + "||" + Alleged assault of Delhi Chief Secy Anshu Prakash: IAS Association takes out candle light protest march at Rajghat

டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஐஏஎஸ் சங்கம் கண்டனம்

டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஐஏஎஸ் சங்கம் கண்டனம்
டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கியதற்கு ஐஏஎஸ் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.#Tamilnews #Anshu Prakash
புதுடெல்லி,

டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ், தன்னை ஆம் ஆத்மி கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக டெல்லி துணை நிலை ஆளுநரிடம் அளித்த புகாரால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்தநிலையில் டெல்லி தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐஏஎஸ் சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் ஐஏஎஸ் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.