தேசிய செய்திகள்

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்திருந்தால் மோசடிகள் ஏற்பட்டிருக்காது அன்னா ஹசாரே கருத்து + "||" + Lokpal & Lokayuktas can be very powerful Anna Hazare

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்திருந்தால் மோசடிகள் ஏற்பட்டிருக்காது அன்னா ஹசாரே கருத்து

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்திருந்தால் மோசடிகள் ஏற்பட்டிருக்காது அன்னா ஹசாரே கருத்து
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்திருந்தால் வங்கி மோசடிகள் ஏற்பட்டிருக்காது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். #PNBScam
புதுடெல்லி,

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்தது.  

இதேபோல் பாங்க் ஆப் பரோடா உள்பட 5 பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக ரோட்டோமேக் பேனா தொழிற்சாலையின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி அவருடைய மனைவி சாதனா, மகன் ராகுல் மற்றும் அடையாளம் காணப்படாத வங்கி அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது. இதன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் விக்ரம் கோத்தாரி மீது ரூ.800 கோடிக்கு மோசடி புகார் அளிக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. எனினும், இந்த தொகை ரூ.3,695 கோடி என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வங்கி மோசடி குறித்து கருத்து தெரிவித்துள்ள அன்னா ஹசாரே கூறியிருப்பதாவது;

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மிகவும் சக்தி வாய்ந்தவை, அதனை நாங்கள் வரைவு செய்தோம் ஆனால் அரசியலில் மக்கள் அதனை விரும்பவில்லை. 2011-ம் ஆண்டு லோக்பால் மற்றும்  லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தி இருந்தால் இது போன்ற பல மோசடிகள் நடந்து இருக்காது.  ஏனோ இது அரசுக்கு புரியவில்லை. அவர்கள் (அரசு) ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறுவார்கள் ஆனால் அதனை பற்றி எதுவும் செய்யமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.