தேசிய செய்திகள்

நீரவ் மோடி விவகாரம் : விபுல் அம்பானி உட்பட மேலும் 6 பேரை கைது செய்தது சிபிஐ + "||" + CBI arrests Vipul Ambani, CFO of Nirav Modi’s firm, and 4 others in PNB fraud case

நீரவ் மோடி விவகாரம் : விபுல் அம்பானி உட்பட மேலும் 6 பேரை கைது செய்தது சிபிஐ

நீரவ் மோடி விவகாரம் : விபுல் அம்பானி உட்பட மேலும் 6 பேரை கைது செய்தது சிபிஐ
வங்கி முறைகேடு வழக்கில் விபுல் அம்பானி உட்பட மேலும் 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.#VipulAmbani
புதுடெல்லி,

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் ரூ.11,700 கோடி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்தது.   

மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த விவகாரம் பூதாகரமாகும் முன்பே,  வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் நிரவ் மோடி தப்பி ஓடினார். இதையடுத்து, நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகளை இந்திய விசாரணை முகமைகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில்,   நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானி உட்பட மேலும் 6 பேரை  சிபிஐ கைது செய்தது.