மாநில செய்திகள்

புதுயுகம் படைக்க மாநாட்டுக்கு வருக! டுவிட்டரில் கமல்ஹாசன் அழைப்பு + "||" + Kamal Hassan calls on Twttier

புதுயுகம் படைக்க மாநாட்டுக்கு வருக! டுவிட்டரில் கமல்ஹாசன் அழைப்பு

புதுயுகம் படைக்க மாநாட்டுக்கு வருக! டுவிட்டரில் கமல்ஹாசன் அழைப்பு
மதுரை ஒத்தக்கடையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருக்கிறார். #KamalHaasan
புதுயுகம் படைக்க மாநாட்டுக்கு வருக! டுவிட்டரில் கமல்ஹாசன் அழைப்பு

மதுரை ஒத்தக்கடையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தனது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நேற்று அழைப்பு விடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

நாளை (இன்று) தொடங்க உள்ளது நம் நெடும் பயணம். நாளை(இன்று) மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சி கொடியை ஏற்ற உள்ளேன். கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்க உள்ளேன். வருக! வருக! புதுயுகம் படைக்க...

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.