மாநில செய்திகள்

2 பதவி வகித்தால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் க.அன்பழகன் உத்தரவு + "||" + If you have a position of 2, you have to resign a post dmk anbaazakagan Order

2 பதவி வகித்தால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் க.அன்பழகன் உத்தரவு

2 பதவி வகித்தால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் க.அன்பழகன் உத்தரவு
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். #Tamilnews
சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மு.க.ஸ்டாலின் நடத்தும் இந்த ஆய்வின்போது அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் 2 பதவிகளில் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முதல் கட்டமாக, கட்சியில் உள்ள அணி அமைப்பு நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளில் இருந்தால் அவர்கள் உடனடியாக ஏதாவது ஒரு பதவியில் இருந்து தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இதனை மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர், காலியாக இருக்கும் பதவிகளில் தகுதியானவர்களை மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்து, அதற்குரிய தகவல்களை தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.