மாநில செய்திகள்

அனைத்துக் கட்சி கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு அரசு அவசர அழைப்பு + "||" + All party meeting

அனைத்துக் கட்சி கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு அரசு அவசர அழைப்பு

அனைத்துக் கட்சி கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு அரசு அவசர அழைப்பு
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதில் தமிழ்நாட்டின் நீர் பங்கீட்டில் குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை, 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதில் தமிழ்நாட்டின் நீர் பங்கீட்டில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்தாலோசிக்க அனைத்து கட்சி கூட்டம், 22–ந் தேதி (நாளை) நடத்தப்படும் என்று தமிழக அரசு 19–ந் தேதி அறிவித்தது.

இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்கு அவசர அவசரமாக அழைப்பை பொதுப்பணித் துறை வழங்கி வருகிறது. சில கட்சிகளின் முகவரிகளை அரசு அலுவலர்கள் விசாரித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.