உலக செய்திகள்

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆக பதிவு + "||" + Powerful quake hits central Papua New Guinea, disrupts oil and gas operations

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆக பதிவு

பப்புவா நியூ கினியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:  ரிக்டரில் 7.5 ஆக பதிவு
பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. #Earthquake

வெல்லிங்டன்,

பப்புவா நியூ கினியா தீவின் தெற்கு ஹைலேண்ட்ஸ் மாகாணத்தில் இன்று காலை 3.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விவரத்தினை பப்புவா நியூ கினியா பேரிடர் மேலாண் அமைப்பு உடனடியாக தெரிவிக்கவில்லை.  இந்நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கம் பாதித்த பகுதியில் பப்புவா நியூ கினியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் ஒன்று உள்ளது. 

5க்கும் கூடுதலான ரிக்டர் அளவுள்ள பல்வேறு நிலநடுக்கங்கள் ஏற்படுத்திய பாதிப்பினை அடுத்து அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது.  எனினும் அங்கு யாரும் காயம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.