சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் ஒப்படைப்பு தனி விமானம் மூலம் இந்தியா வருகை + "||" + Sridevis mortal remains to be flown back today body yet to be handed over to family

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் ஒப்படைப்பு தனி விமானம் மூலம் இந்தியா வருகை

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் ஒப்படைப்பு  தனி விமானம்  மூலம் இந்தியா வருகை
நடிகை ஸ்ரீதேவி மரணம் துபாயில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்குள் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா வருகிறது. #RIPSridevi #Sridevi
சென்னை

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் கோலோச்சி, இந்தி சினிமாவின் ராணியாக வலம் வந்த  ஸ்ரீ தேவி, இப்போதும் இந்திய ரசிகர்கள் மனதில் நிறைந்து உள்ளார்.

இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது .

ஆம், ஸ்ரீதேவி 54 வயதில் இந்த பூவுலகைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதே அது. 

அவர் துபாயில் ஒரு திருமண நிகழ்வில் இருந்தபோது, அவர் மாரடைப்பால்  இறந்தார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது உடல் நிலையில் எப்போதும் மிகவும் கவனமாக இருக்கும் ஒரு பிரபலம் இதுபோல சட்டென்று இறந்துபோவது நம்பமுடியாத ஒரு விஷயம்.

இன்றும் அவரது உடல் துபாயில் இருந்து இந்தியா கொண்டுவரப்படவில்லை.  அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனி விமானம் நேற்று பிற்பகல் துபாய் சென்றுள்ளது. துபாயில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்குள் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.  தடயவியல் அறிக்கையை பெற்று அவரது உடல் எம்மாமிங் செய்யப்படும். 

ஸ்ரீதேவியின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஸ்ரீதேவியின் இறுதிசடங்கு  சாந்தாகுரூஸ்  பகுதியில் நடைபெறுகிறது.  இறுதி சடங்கு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஜினி, பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ளனர்.