சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் :ஓட்டல் அறையில் நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்... + "||" + What exactly happened on the night Sridevi died?

நடிகை ஸ்ரீதேவி மரணம் :ஓட்டல் அறையில் நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...

நடிகை ஸ்ரீதேவி மரணம் :ஓட்டல் அறையில் நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...
நடிகை ஸ்ரீதேவி மரணம் ஓட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. #RIPSridevi #Sridevi
நடிகை ஸ்ரீதேவி தங்கி இருந்த  ஓட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து  அங்கிருந்து வெளியாகும் பத்திரிகைகள்  தகவல்கள் வெளியிட்டு உள்ளன அதன் விவரம் வருமாறு;-

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில்தான் உறவினரின் திருமணம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன்  கலந்து கொண்டார். அவரது மூத்த மகள் ஜான்வி கபூர், தனது முதல் படத்திற்கு பிஸியாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.  திருமணம் முடிந்ததும். போனி கபூரும்  இளைய மகள் குஷியும் நாடு திரும்பினர். ஆனால் ஸ்ரீதேவி அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்தார்.

ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த போனி கபூர், ஸ்ரீதேவிக்கு தெரிவிக்காமல் சனிக்கிழமை மீண்டும் துபாய் திரும்பி உள்ளார். ஸ்ரீதேவியின் அறைக்கு சென்ற போனி கபூர், அவருடன் 15 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார். பின்னர் இரவு விருந்திற்காக ஸ்ரீதேவியை அழைத்துள்ளார். பாத்ரூமிற்கு சென்ற ஸ்ரீதேவி வெகு நேரமாகியும் திரும்பவில்லை. அவர் கதவை திறக்காததால், கதவை உடைத்து போனி கபூர் உள்ளே சென்ற போது, அங்கு ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதையடுத்து தனது நண்பர்  ஒருவரை வரவழைத்து, இது தொடர்பாக டாக்டர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். இதனையடுத்து துபாய் நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.  என உறவினர்கள் கூறியதாக என கூறப்பட்டு உள்ளது.

 ஆனால் ஓட்டலில் உள்ள பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாயிலுள்ள சில ஊடகங்கள் மூலம் ஒரு தகவல் பரவியது. 

குறைந்த ரத்த அழுத்தத்தால் ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். இதையடுத்துதான் அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என அந்த தகவலில் கூறப்பட்டது. உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்றும் அவரது உடல் துபாயில் இருந்து இந்தியா கொண்டுவரப்படவில்லை.  அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனி விமானம் நேற்று பிற்பகல் துபாய் சென்றுள்ளது. துபாயில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்குள் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.  அதை தொடர்ந்து இந்தியா கொண்டுவரப்படும்.