சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்தி போட்ட டுவீட் + "||" + Actress Sridevi last Tweet

நடிகை ஸ்ரீதேவி கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்தி போட்ட டுவீட்

நடிகை ஸ்ரீதேவி  கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்தி போட்ட டுவீட்
காத்தாடி படக்குழுவை வாழ்த்தி போட்ட டுவீட் தான் ஸ்ரீதேவி கடைசியாக போட்ட டுவிட் #RIPSridevi #Sridevi

ஸ்ரீதேவியின் நிஜ பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன் என்பதாகும். சினிமாவில் நுழைந்த பின்னர் தனது பெயரை ஸ்ரீதேவி என அவர் மாற்றி கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி முதலில் தமிழில் அறிமுகமான திரைப்படம் துணைவன் (1969). இந்தியில் சோல்வா சாவன் (1979) திரைப்படம் மூலம் அவர் அறிமுகமானார். 

1980-கள் மற்றும் 1990-களில் அனில் கபூர் - ஸ்ரீதேவி ஜோடியை மிக பெரிய வெற்றிகரமான ஜோடி என மக்கள் கொண்டாடினார்கள். இருவரும் இணைந்து நடித்த 13 திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் படங்கள் தான்.

ஸ்ரீதேவிக்கு கடந்த 1990-ல் ஹாலிவுட் திரைப்படம் ஜுராசிக் பார்க்கில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் இந்தி மற்றும் தமிழில் அப்போது உச்சத்தில் இருந்ததால் அந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அந்த படத்தில் தன் கதாபாத்திரம் அந்தளவு மக்களை ஈர்ப்பது போல இல்லை என இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்கிடம் கூறிவிட்டார். 

தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகில் நுழையும் போது அவருக்கு இந்தியில் பேச அவ்வளவாக வராது. அதனால் அவரின் ஆரம்பகால திரைப்படங்களில் அவருக்கு குரல் டப்பிங் செய்யப்பட்டது. கடந்த 2002-ல் சக்தி என்ற திரைப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்யவிருந்தார் ஸ்ரீதேவி, ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 

13 வயதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மாற்றந்தாயாக ஸ்ரீதேவி மூன்று முடிச்சு (1976) திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கடந்த  2013-ல் இந்திய அரசு ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த விருது இந்திய அரசால் வழங்கப்படும் மிக பெரிய விருதுகளில் ஒன்றாகும். ஸ்ரீதேவி தொழில்பக்தி உடையவர். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீதேவியின் அப்பா உயிரிழந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீதேவி லண்டனில் படப்பிடிப்பில் இருந்தார். தந்தை இறப்பு செய்தி கேட்டு அவர் இறுதிசடங்கில் பங்கேற்ற ஸ்ரீதேவி அதன்பின்னர் உடனடியாக மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார்.

ஸ்ரீதேவி டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக இருந்தார். துபாயில் திருமண நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ரீதேவி. அது தான் அவர் பகிர்ந்த கடைசி புகைப்படம். 

'காத்தாடி' படத்தில் நடிகை தன்ஷிகா நடித்துள்ளார். இப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. காத்தாடி படக்குழுவை வாழ்த்தி போட்ட டுவீட் தான் ஸ்ரீதேவி கடைசியாக போட்ட டுவீட்.